கஜா புயல் நிவாரணத்திற்காக சம்பளம் பிடித்தம்! போக்குவரத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்



Transport employees sudden strike

சென்னையில் திடீரென பல இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கஜா புயல் நிவாரணத்திற்காக எந்தவித முன்னறிவிப்பும் இன்றியும் ஊழியர்களின் அனுமதி இல்லாமலும் அரசு போக்குவரத்துத்துறை 2 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்துள்ளது. இதனை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 

Tntransport strike

திருவான்மியூர், தி.நகர், அண்ணா நகர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அரசு போக்குவரத்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் பல இடங்களில் பேருந்துகள் மிக குறைவான எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை திரும்ப வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.