மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
17 வயது சிறுமியிடம் அத்துமீற முயற்சி: டிராவல்ஸ் கடை உரிமையாளர் கைது.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது சிறுமி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் இருக்கும் உறவினரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து ட்ராவல்ஸ் கடை ஒன்றுக்கு கடந்த 18-ம் தேதி முதல் வேலையில் சேர்ந்து பணியாற்ற தொடங்கினார். அச்சமயம் அலுவலகத்தில் உள்ள கழிவறையை சிறுமி உபயோகப்படுத்தியதாக தெரிய வருகிறது.
இதனை கவனித்துக் கொண்டிருந்த கடையின் உரிமையாளர் தாஜுதீன் என்பவர் கதவை மூடிவிட்டு சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சி செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அங்கிருந்து தப்பிவந்த நிலையில், சிறுமி அளித்த புகார் பேரில் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.