திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கல்யாணம் ஆகாமல் குழந்தை பெற்ற 19 வயது கல்லூரி மாணவி வாயில் விஷம் ஊற்றி கொலை.. தந்தை, அத்தை பயங்கர செயல்..!
காதலருடன் நெருங்கி பழகி கர்ப்பமான கல்லூரி மாணவி குழந்தை பிறந்ததால், அவரின் தந்தை மற்றும் அத்தையால் கொலை செய்யப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம், எலமனூர் தபோவனம் அருகேயுள்ள புதர் பகுதியில் 5ம் தேதி பிறந்து சிலமணிநேரம் ஆன ஆண் சிசு ஜீயபுரம் காவல் துறையினரால் மீட்கப்பட்டது. இந்த குழந்தையை அதிகாரிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, கல்லூரி மாணவியாக பயின்று வந்த 19 வயது கலைவாணி என்பவர், தனது காதலருடன் நெருங்கி பழகிய காரணத்தால் கர்ப்பமாகியுள்ளார். திருமணம் ஆகாமல் கருத்தரித்த காரணத்தால், கிராமத்தினர் தன்னை அவதூறாக பேசுவார்கள் என எண்ணி குழந்தையை புதரில் வீசி இருக்கிறார்.
வீட்டில் இருந்த மாணவி கலைவாணி விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி சிகிச்சையில் இருக்கையில் தனது மரண வாக்குமூலம் தொடர்பான விபரத்தையும் பதிவு செய்து செய்திருந்தார்.
அதில், தனது வாயில் இரண்டு பேர் விஷம் ஊற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறியுள்ளார். இதனால் ஜீயபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், மாணவியின் தந்தை செல்வமணி, அத்தை மல்லிகா ஆகியோர் சேர்ந்து கலைவாணியை விஷம் ஊற்றி கொலை செய்தது அம்பலமானது.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாணவி சம்பவத்தன்று தனது தாயாரின் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு தந்தை செல்வமணி, அவரின் சகோதரி மல்லிகா ஆகியோர் சேர்ந்து மாணவியை பூச்சிக்கொல்லி மருந்து குடிக்க வற்புறுத்தி இருக்கின்றனர். இதனால் நடந்த கொலை சம்பவத்தால் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 2 பேரையும் கைது செய்தனர்.