மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் சர்ச்சை பதிவு; திருச்சியில் பாஜக நிர்வாகி கைது.!



trichy-bjp-party-supporter-arrested-by-trichy-uraiyur-c

 

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பழனி பாபா என்பவர் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வந்தது. இந்த விடியோவை திருச்சி மாவட்ட சமூக வலைதள அணி பாஜக நிர்வாகி புகழ் என்பவர் பதிவிட்டதாக தெரியவருகிறது. 

பழனி பாபா பேசிய வீடியோவை கண்ட பலரும், காவல் நிலையத்தில் மதக்கலவரத்தை பாஜக நிர்வாகி தூண்ட முயற்சிப்பதாக புகார் அளித்தனர். முகநூல் பதிவு ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரை ஏற்ற திருச்சி உறையூர் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, பாஜக நிர்வாகியான புகழை கைது செய்தனர். இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட புகழ் பாஜக தகவல் தொழில்நுட்ப ஊடக பிரிவில் மாநில செயலாளராக இருந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.