மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனை விட்டு, காதலனுடன் ஓட்டம் பிடித்த புதுமணப்பெண்.. கண்ணீரில் கணவன்., விஷம்குடித்து உயிரை மாய்த்த தகப்பன்..!
திருமணத்திற்கு முன்னர் இருந்த காதலனுடன், திருமணமாகி 2 மாதங்கள் ஆன இளம்பெண் ஓட்டம் பிடித்ததால், பெண்ணின் தந்தை மனதுடைந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி, அரியூர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 28). இதே பகுதியை சேர்ந்த இளம்பெண் வைஷ்ணவி (வயது 20). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
தம்பதிகள் இருவரும் தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கி மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், திடீரென இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வைஷ்ணவி வீட்டில் இருந்து திடீரென மயமாகி இருக்கிறார்.
அவரின் கணவர் மற்றும் உறவினர்கள் வைஷ்ணவியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத நிலையில், லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, வைஷ்ணவிக்கு திருமணத்திற்கு முன்னர் அன்பில் பகுதியில் வசித்து வந்த கார்த்திக்குடன் காதல் இருந்தது தெரியவந்தது. மகளின் காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர், மாரியப்பனுக்கு விஷயத்தை மறைத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதனால் முன்னாள் காதலன் கார்த்திக்குடன் வைஷ்ணவி ஓட்டம் பிடித்திருக்கலாம் என்று தேடுதல் பணி நடந்து வருகிறது. மகளின் செயல்பாடுகளை அறிந்து அதிர்ச்சியான வைஷ்ணவியின் தந்தை சண்முகம், பூச்சிக்கொல்லி மருந்து குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.