திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடத்துனருடன் பேசிய காதலி., பொஸசிவில் பேருந்தை நிறுத்தி நடத்துனரை நொறுக்கியெடுத்த காதலன்.. நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்.!
காதலி நடத்துனருடன் நட்பாக பழகி தன்னுடன் பேச மறுத்தால் ஆத்திரமடைந்த காதலன் தனியார் பேருந்து நடத்துனரை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரும், தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவரும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. மாணவி தினமும் தனியார் பேருந்தில் பயணம் செய்து வருவதால், பேருந்தில் நடத்துனராக பணியாற்றும் நாகேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கல்லூரி மாணவி காதலியுடன் பேசாமல் இருந்து வரவே, தனது காதலி பேசாமல் இருப்பதற்கு பேருந்து நடத்துனர் தான் காரணம் என கார்த்திக் எண்ணியுள்ளார். இதனையடுத்து, அவர் தனது நண்பர்களான ராக்கி, குணா ஆகியோருடன் பேருந்தை வழிமறித்து இருக்கிறார்.
பின்பு, பேருந்துக்குள் சென்று முன்புறம் இருந்த நடத்துனரை 3 பேர் கும்பல் சரமாரியாக தாக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு 3 பேர் கும்பலை அப்புறப்படுத்தினர். சம்பவத்தில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக நாகேசன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பேருந்தின் நடத்துனர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.