நல்லபடியா இறங்கிட்டா போடும்.. திருச்சியில் மறுமுறை இறங்கிய ஷார்ஜா விமானம்.. கொண்டாடிய இளைஞர்கள்.!



Trichy Sharjah Air India Flight Landing Youngsters Cheers Happy after Safe Landing 

 

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு, நேற்று மாலை சுமார் 05:45 மணியளவில் 144 பயணிகளுக்கான ஏர் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. விமானம் மேலே பிறந்தபின், அதன் சக்கரங்கள் உள்ளே இழுத்துக் கொள்ளப்படவில்லை.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவை வெளியே இருந்த நிலையில், விமானிகள் உடனடியாக ஏர்லைன் கண்ட்ரோல் ரூமுக்கு தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கு அனுமதி கேட்டனர். மேலும், விமானத்தின் எடை அதிகம் இருந்ததால், அதனை குறைக்க விமான எரிபொருளை காலி செய்ய 2 மணிநேரம் வானிலே சுற்றி வந்தனர். 

இதையும் படிங்க: தாய்ப்பால் குடித்துவிட்டு உறங்கிய கைக்குழந்தை மர்ம மரணம்; பிறந்து  7 நாட்களில் நடந்த சோகம்.!

பத்திரமாக தரையிறக்கம்

பின் 2 மணிநேரம் 45 நிமிடங்களுக்கு பின்னர் இரவு 8:15 மணிக்கு விமானம் திருச்சியில் தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும்போது விமானத்தின் லெண்டிங் கியர் அப்படியே இருந்ததால், எந்த விதமான கோளாறும் இன்றி விமானம் தரையிறங்கியது. விமானம் விபத்தில் சிக்கிவிடுமோ என்ற அச்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அவசர ஊர்தியும் அங்கு கொண்டு வரப்பட்டு இருந்தது.

விமான நிலையத்தில் கொண்டாட்டம்

எந்த விதமான சம்பாவிதமும் நேராமல் இந்தோனேஷியா விமானி இக்ரம் ஜினால், துணை பெண் விமானி மைத்ரி ஆகியோர் விமானத்தை கீழே இறக்கி இருந்தனர். இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. விமானம் திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கினால் போதும் என்ற எண்ணத்துடன் விமான குழுவினர், பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், விமானத்தில் பயணிப்போரின் உறவினர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்தனர். இதனிடையே, விமானம் பத்திரமாக தரையிறங்கியதும் பலரும் உற்சாக முழக்கத்தை எழுப்பி, கைதட்டி ஆரவாரம் அடைந்தனர். அதன் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 வயது சிறுவன்; அலட்சியத்தில் இருந்து மீண்டுவராத அதிகாரிகள்.!