மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் அண்ணியுடன் கள்ளக்காதல்.. நடுரோட்டில் அரிவாளுடன் துரத்திய கணவன்.. பரபரப்பு சம்பவத்தின் பகீர் பின்னணி.!
கள்ளக்காதல் வயப்பட்ட நபரை வெட்டிசாய்க்க கணவன் நடுரோட்டில் அரிவாளை எடுத்து விரட்டிய பகீர் சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் வசித்து வருபவர் சந்துரு. இவரின் மனைவி சத்யா. தம்பதிகளுக்கு மகன் இருக்கின்றார். சந்துருவின் தங்கை விஜயலட்சுமி. இவரின் கணவர் சிவகுமார். சிவகுமாரும் - விஜயலட்சுமியும் தனிக்குடித்தனம் வசித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவால் விஜயலட்சுமி உயிரிழந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்த சிவகுமார் அவ்வப்போது சந்துருவின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, சத்யாவிற்கும் - சிவகுமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதாவது, மனைவியின் அண்ணியுடன் சிவகுமார் கள்ளக்காதல் வயப்பட்டுள்ளார். இதனால் இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
ஒருகட்டத்தில் சத்யா தனது கணவரை பிரிந்து மகனுடன் சிவகுமார் வீட்டிற்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்துளளனர். கடந்த 2 வருடமாக கள்ளக்காதல் ஜோடி வாழ்ந்து வந்த நிலையில், சந்துரு மனைவியின் மீது கொண்ட பாசத்தால் அவரை பலமுறை அழைத்து பார்த்தும் பலனில்லை. 2 வருடமாக கெஞ்சி பார்த்த சந்துரு, இந்த பிரச்சனைக்கு காரணமான சிவகுமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
நேற்று மதிய வேளையில் திருவானைக்காவல் மேம்பால பகுதியில் சென்ற சிவகுமாரை சந்துரு அரிவாளுடன் துரத்தி துரத்தி வெட்டியுள்ளார் பட்டப்பகலில் நடந்த சம்பவத்தால் பதறிப்போன வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், சந்துரு அரிவாளுடன் துரத்தியதால் மக்களும் உயிர் பயத்தில் சிவகுமாரை காப்பாற்ற முன்வரவில்லை. வீடியோ மட்டும் பதிவு செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீரங்கம் காவல் துறையினர் சிவகுமாரை காப்பாற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்துருவின் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.