மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயதில் திருமணம்., மனக்கசப்பு., 16-ல் குழந்தை.. போக்ஸோவில் கைதான 25 வயது இளைஞர்.. திருச்சியில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!
25 வயது இளைஞருடன் 15 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணமான 20 நாட்களில் கணவரை பிரிந்து சென்ற சிறுமிக்கு 1 ஆண்டுக்குள் குழந்தை பிறந்துள்ளது. பெற்றெடுத்த குழந்தையை அனாதையாக வீசிவிட்டு வந்த பதைபதைப்பு பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர், கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கண்ணன் (வயது 25). இவருக்கும் - துறையூர் பச்சைப்பெருமாள்பட்டியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும் நவம்பர் 10, 2021-ல், புளியஞ்சோலை கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்து வந்த கண்ணனின் குடும்பத்தினர், கண்ணன் - சிறுமியை குடும்பம் நடந்த அனுமதித்துள்ளனர்.
இதனால் சிறுமி - கண்ணன் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, சிறுமியின் விருப்பம் இன்றி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. திருமணம் ஆன 20 நாட்களிலேயே கணவரை பிரிந்து பெற்றோரின் வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமியை தாய் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் வருவதற்கு 10 மணியாகும் என்று செவிலியர்கள் தெரிவிக்கவே, காத்திருந்த சிறுமிக்கு மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. சிறிது நேரத்தில் தாயும் - மகளுமாக இருவரும் தப்பி சென்றுவிட, மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளை நிர்வாகம் தேடியநேரத்தில் பஞ்சாயத்து அலுவலத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்றுபார்த்தபோது குழந்தை மீட்டெடுக்கவே, பின் சமூக நலத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் மேற்கூறிய தகவல் அம்பலமாகவே, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் கண்ணனை கைது செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த பெற்றோரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.