திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விசிக மாநாடு சென்று திரும்பிய வாகனம் விபத்து: 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதற்காக தமிழகம் எங்கும் இருக்கும் விசிக தொண்டர்கள் பலரும் திரளாக வந்தனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் பகுதியில் விசிக மாநாடு நடைபெற்ற முடிந்து வேனில் வந்தவர்கள் தங்களின் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
இவர்களின் வாகனம் வேப்பூர் பகுதியில் வந்த போது, லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 20 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் & மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விரைவில் இவர்களை திருமாவளவன் மருத்துவமனையில் நேரில் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.