திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வறுமையிலும் நேர்மை..! ரூ.2 இலட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்மணி.. குவியும் பாராட்டுக்கள்..!!
சாலையில் கிடந்த ரூ.2 இலட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு காவல் ஆணையர் தங்க நாணயத்தை பரிசளித்தார்.
திருச்சியில் உள்ள தில்லை நகர் தேவர் காலனியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவரின் மனைவி ராஜேஸ்வரி (வயது 40). இவரின் கணவர் செல்வராஜ். இவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இதனால் வயிற்றுப்பிழைப்புக்காக ராஜேஸ்வரி தில்லை நகரில் உள்ள டிபன் கடையில் ரூ.100 சம்பளத்திற்கு வேலைபார்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினத்தில் வேலைக்கு சென்ற சமயத்தில், காகிதப்பை தனியே கிடந்துள்ளது. அதனை ராஜேஸ்வரி எடுத்து பார்த்தபோது ரூ.2 இலட்சம் பணம் காட்டாக இருந்துள்ளது. இதனையடுத்து, ராஜேஸ்வரி தனது கடை உரிமையாளர் பிரபாகரின் உதவியுடன் தில்லை நகர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு தகவலை கூறி அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைக்கவே, காவல் அதிகாரிகள் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ராஜேஸ்வரிக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.