மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சியில் கொரோனா தொற்றால் ஒரு வயது குழந்தை பாதிப்பு..!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் கடந்துள்ளது.
அத்துடன் இதுவரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று திருச்சியில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அந்த 5 பேரில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். அந்த குழந்தைக்கு ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தந்தையால் தான் குழந்தைக்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.