மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிதான் உண்மையான தர்மயுத்தம் ஆரம்பம்.! வெளிப்படையாக பேசிய டி.டி.வி.தினகரன்.!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் நேர்காணல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று தொடங்கியது. அதில் துணை பொதுச்செயலாளர்கள் ஜி.செந்தமிழன், ரங்கசாமி, பழனியப்பன், துணைத்தலைவர் எஸ்.அன்பழகன், ஆட்சிமன்றக்குழு தலைவர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வாக்குகள் சிதறாது என்ற நம்பிக்கை உள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு வாக்குகள் அளிப்பார்கள். மற்ற கட்சிகளை பற்றி பேச விரும்பவில்லை. நாங்கள் மாபெரும் வெற்றியை பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம்.
உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடக்கம். இந்த சட்டப்பேரவை தேர்தலில் உண்மையான தர்மயுத்தம் தொடங்குகிறது. நாங்கள் அதர்மத்தையும் எதிர்க்கிறோம். துரோகத்தையும் எதிர்க்கிறோம். இந்த தர்ம யுத்தத்துக்கு தமிழக மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். 3-வது அணி என்று ஏதும் இல்லை அ.ம.மு.க. தலைமையில் அமையும் கூட்டணிதான் உன்மையான வெற்றி கூட்டணி. அது தான் வெற்றி அணியாக இருக்கும் என தெரிவித்தார்.