தங்கத்தமிழ்ச்செல்வன் - டிடிவி தினகரன்: என்ன தான் நடக்குது அங்கே? குழப்பத்தில் அமமுக-வினர்!



ttv-dhinakaran-thanga-thamilchelvan-issue


டிடிவி தினகரனின் வலதுகை என கூறப்பட்ட தங்கத்தமிழ்ச்செல்வன், டிடிவி தினகரன் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  டிடிவி தினகரன் குறித்து நான் விமர்சனம் செய்தது உண்மைதான். முடிந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கி கொள்ளுங்கள் என  ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனையடுத்து கட்சியின் தலைமை நிர்வாகம் சரியில்லை. கட்சித் தலைமைக்கு நான் சில தகவல்களை தெரிவித்தேன். நான் தெரிவித்த அத்தனையும் உண்மைதான்  என தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டார் தங்கத்தமிழ்ச்செல்வன். தேர்தலில் தோல்வியடைந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார் தங்கத்தமிழ்ச்செல்வன். 

ttv dinakaran

இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் தங்கத்தமிழ்ச்செல்வன் பேசும் அந்த வீடியோவில், நான் விஸ்வரூபம் எடுத்தால் தாங்கமாட்டீர்கள் என்று தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருந்தார்.

இந்த ஆடியோ குறித்து விளக்கம் அளித்த தமிழ்ச்செல்வன், கட்சியில் ஒருசில நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்ததால் நான் தலைமையை விமர்சனம் செய்து பேசினேன். நான் பேசியது உண்மைதான். நான் பேசியது தவறு என்றால் என்னை கட்சியில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால் என்னை பற்றி இல்லாததும், பொல்லாததையும் இணையத்தில் பரப்பி வருவது என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.