சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
நேதாஜியுடன் நெருக்கமாக இருந்த இளைய தலைமுறைக்கு முன்மாதிரி.! 100-வது வயதில் அடியெடுத்து வைக்கும் சங்கரய்யா.! டிடிவி தினகரன் வாழ்த்து.!
விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா, இன்று 100ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.
விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா, இன்று 100ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். கம்யூனிசமும், போராட்டமும், சிறை வாழ்க்கையுமாக நூற்றாண்டை அவர் கடந்து வந்திருக்கிறார்.
விடுதலைபோராட்ட காலத்தில், அடிமைப்பட்டுக்கிடந்த தேசத்தின் நிலையும், உழைப்புச்சுரண்டலையும் கண்டு மனம் பொங்கிய சங்கரய்யா, கல்லூரி படிப்பை முடிக்க முடியாமல் போராட்ட வாழ்க்கையை தொடர்ந்தார். ராஜாஜி முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் சட்டத்தை இயற்றினார். இந்த இந்தித் திணிப்புக்கு எதிராக 1938-ம் ஆண்டு போராட்டம் நடத்தியவர் சங்கரய்யா.
அவரது வாழ்நாளில் 8 ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், 3 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அவர் 3 முறை மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். சிறை வாழ்க்கையில் முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் உடன் நட்பு கொண்டவர். சென்னை மாகாணத்தின் அந்நாள் முதல்வர் ராஜாஜி முதல் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைத்து தலைவர்களிடம் நெருக்கம் கொண்டவர்.
தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்தநிலையில், அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சங்கரய்யா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக பயணித்து இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும் அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். (2/2)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) July 15, 2021
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், "சுதந்திர போராட்ட வீரரும், முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான பெரியவர் திரு.என்.சங்கரய்யா அவர்கள் 100வது வயதில் அடியெடுத்து வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள். ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து வழுவாமல் இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக பயணித்து இளைய தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழும் அவர் இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.