#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போன் மூலம் கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை! மருத்துவரின் அலட்சியத்தால் இரட்டை சிசுக்களுக்கு நேர்ந்த விபரீதம்!
தஞ்சை மாவட்டம் பூண்டி கல்லூரி பகுதியில் வசித்து வருபவர் குமரவேல். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தையில்லாத நிலையில் அவர் அபி அண்ட் அபி என்ற மருத்துவமனையில் ராதிகா ராணி என்ற மருத்துவரிடம் இதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதனை தொடர்ந்து பல லட்ச ரூபாய் செலவு செய்த நிலையில் அவர் கருவுற்றார்.
மேலும் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக போகிறார் என்ற செய்தியை கேட்டதும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான விஜயலட்சுமிக்கு சமீபத்தில் திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பதறிப்போன குடும்பத்தார்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராதிகா ராணி குழந்தைகள் நலமாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கும்படியும் கூறிவிட்டு சென்னை புறப்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன் பின்னரும் அவருக்கு வலி குறையவில்லை.
இந்நிலையில் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் நர்ஸ்கள் விஜயலட்சுமிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ராதிகா ராணி செல்போனில் ஆலோசனை வழங்கி வந்துள்ளார். இவ்வாறு ஐந்து மாத கர்ப்பிணியான விஜயலட்சுமியின் உடல்நிலையை நேரில் பார்க்காமல் அவருக்கு அனைத்து சிகிச்சைகளை குறித்தும் மருத்துவர் ராதாராணி செல்போனிலேயே விளக்கமளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு திடீரென பனிக்குடம் உடைந்த நிலையில் மருத்துவர் ராதிகா ராணி தனக்கு தெரிந்த மற்றொரு மருத்துவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியை பரிசோதனை செய்த அந்த மருத்துவர் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
பின்னர் குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு விஜயலட்சுமியின் உயிரை காப்பாற்றியுள்ளார்.இது குடும்பத்தாருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து மருத்துவரின் அலட்சியத்தால் தங்களது குழந்தை உயிரிழந்துவிட்டதாக விஜயலட்சுமியின் குடும்பத்தார்கள் மருத்துவமனையில் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது