மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் வகுப்பு என கூறி ஒரே ரூமில் இரட்டைசகோதரிகள் செய்த காரியம்! கதவைத்திறந்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் இன்ஜினியராக உள்ளார். இவரது மனைவி கௌரி இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் பத்மபிரியா மற்றும் ஹரிப்ரியா இருவரும் இரட்டை சகோதரிகள் இவர்கள் இருவரும் காட்பாடி பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர் இந்நிலையில் இவர்களுக்கு 12 ஆம் வகுப்பிற்கான பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைக்கு சென்று படித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இரட்டை சகோதரிகள் இருவரும் ஆன்லைன் வகுப்புகள் நடக்க இருப்பதாக கூறி, வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளனர். மேலும் வீட்டின் கீழ் தளத்தில் அவரது தாய் கௌரியும், சகோதரன் பத்மகுமாரும் இருந்துள்ளனர். இந்நிலையில் காலையில் மாடிக்கு போனவர்கள் வெகுநேரமாகியும் கீழே வராததாள் கௌரி மேலே சென்று பார்த்துள்ளார். அங்கு அவர்களது அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
மேலும் நீண்ட நேரமாகியும் அவர்கள் கதவை திறக்காததால் பதற்றமடைந்த அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே இருவரும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளனர். இதனை கண்டதும் கௌரி கதறி துடித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில் கௌரி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் அந்த பிள்ளைகள் தான் வீட்டு வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
ஆனாலும் அவர்களை கௌரி அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பார். மேலும் வீட்டில் பெற்றோர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டும் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.