ட்விட்டரா?.. ஆ*ச படத்தளமா?... தரம்கெட்டுப்போன ட்விட்டர், எட்டுத்திக்கும் ஆ., வீடியோக்கள்.!



Twitter Platform Have Most Porn Video Police Should Take Action

கையடக்க கைப்பேசிக்குள் உலகம் வரத்தொடங்கிய நாட்களில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களும், எதிர்காலத்தை அழிக்கும் பல விஷயங்களும் நிறைந்து பரவி வருகின்றன. இன்றளவில் வெகுவாக அதிகரித்துள்ள ஆபாச படம் பார்க்கும் செயல்கள் வயது வித்தியாசமின்றி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட குற்றங்களே அதற்கு சாட்சியாகவும் அமைகிறது. 

ஒருபுறம் ஆபாச படங்களை பார்த்து எதிர்காலத்தை இழந்து வரும் இளைய தலைமுறை, மற்றொருபுறம் ஆபாச படங்களில் உள்ள காணொளிகளை போல வித்தியாசமான முறையில் தாம்பத்தியம் மேற்கொள்ள முயற்சித்து ஏற்படும் உயிரிழப்புகள், பெண்கள் மீதான பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிகரிப்பு என்று பல துயரங்கள் கண்முன்னே நடந்து வருகிறது. 

twitter

ஆபாச படங்களை பார்க்க பல்வேறு இணையதளங்கள், செயலிகள் உள்ளன. இவை அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளவை ஆகும். இதில், சிறார்களுக்கு எதிரான பாலியல் காட்சிகள் நிறைந்த ஆபாச படங்கள் பார்த்தவர்களை கடந்த சில வருடத்திற்கு முன்னர் கைது செய்தனர். அதுவும், அமெரிக்காவில் இருந்து வந்த தரவுகளின் பேரில், இந்தியாவின் மானம் போய்விட்டது என நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பொதுவாக ஆபாச படங்களை பார்க்கும் பலரும் முதற்கட்ட, மூன்றாம் கட்ட செயலிகளை உபயோகம் செய்து வந்த நிலையில், ட்விட்டர் மற்றும் முகநூல் போன்ற செயலிலும் ஆபாச விடியோக்கள் பரவ தொடங்கியுள்ளது. இதுதொடர்பான பல கணக்குகள் போலி பெண்கள் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஆபாச விடீயோக்களை பார்ப்பவர்களை கைது செய்யும் உள்ளூர் காவல் துறையினர், உள்ளூரில் போலியான பெயரில் உலாவும் பிட்டு ஐ.டிக்களை கண்டறிந்து, அதனை இயக்கி வருபவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.