திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடிப்பாவிகளா...! அதிக பணம் தருகிறேன் வாங்க... இரண்டு பெண்களின் துணிகர செயலால் ஆடிப்போன போலீஸ்...
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதியழகன் - வளர்மதி தம்பதியினர். இவர்கள் பச்சிளம் பெண் குழந்தைகளை விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல் பெண்கள் பலரை அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி கருமுட்டையை விற்க வைத்துள்ளனர்.
சம்பவத்தன்று சீலநாயக்கன்பட்டி ரவுண்டான பகுதியில் இடைத்தரகர்கள் வளர்மதி அவருடைய கணவர் மதியழகன் மற்றும் ஈரோட்டை சேர்ந்த லதா ஆகியோர் பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்ய எடுத்து வந்தபோது போலீஸாரிடம் வசமாக சிக்கிக்கொண்டனர்.
மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லதா மற்றும் வளர்மதி இருவரும் குழந்தைகளை விற்கும் இடைத்தரகர்கள் எனவும் இதற்கு உடந்தையாக வளர்மதியின் கணவர் இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த இரண்டு பெண்களும் தலா ஐந்திற்கும் மேற்பட்ட பெண்களின் கரு முட்டைகளை விற்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தைகளை விற்பனைக்கு பேரம் பேசியதும் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் கைது செய்த போலீசார் இரண்டு பெண் இடைத்தரகர்களையும் அதற்கு உடந்தையாக இருந்த மதியழகன் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.