மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பதற்றம்.!! அடிதடியில் முடிந்த நோன்பு கஞ்சி விவகாரம்.!! மசூதியில் இருதரப்பு மோதல்.!! போலீஸ் குவிப்பு.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரு பிரிவினரிடையே மேலும் மோதல் நடைபெறுவதை தடுப்பதற்காக அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளிவாசலில் வருடம் தோறும் ரமலான் மாதம் நோன்பை முன்னிட்டு கஞ்சி காய்ச்சி ஏழைகளுக்கு வழங்கி வருகின்றனர். இது தொடர்பாக இரு பிரிவினர் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது.
தற்போது ரமலான் மாதம் நடைபெற்று வருவதால் நோன்பு கஞ்சி காய்ச்சுவதிலும் தொழுகை நடத்துவதிலும் இருதரப்பினரிடையே நேற்று மோதல் நடைபெற்றது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்சனை கைகலப்பில் சென்று முடிந்தது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும் கைகளாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இருதரப்பைச் சார்ந்த பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.
குறைவான எண்ணிக்கையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் அவர்களால் மோதலை தடுக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருதரப்பைச் சார்ந்த 10 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.