திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இப்படி பண்றீங்களேம்மா... பெண் போலீஸ் விரலை கடித்த 2 பேர் கைது.!
விழுப்புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசின் கையை கடித்து தாக்க முயன்ற சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் நேரு சாலையில் திமுக அலுவலகத்திற்கு அருகே நகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்திற்கு பலரும் உரிமை கொண்டாடும் நிலையில் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்தன. இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நகராட்சி அலுவலர்கள் ஒட்டிய நோட்டீஸ் கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை அகற்ற முயன்ற போது செல்வராணி என்ற பெண் போலீசின் கைவிரல்களை கடித்ததோடு அவரை தாக்க முயன்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நகராட்சி ஆணையர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் பெண் போலீசை தாக்கிய சிவகாமி மற்றும் பிரசாந்த் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.