மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மயிலாடுதுறையில் மது அருந்தி உயிரிழந்த இருவர்...!! காவல்துறை விசாரணையில் வெளியான பகிர் தகவல்...!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா தத்தங்குடியைச் சேர்ந்தவர் பழனி குருநாதன் (55). இவர் மங்கைநல்லூர் கடைவீதியில் தச்சுப் பட்டறை வைத்து நடத்தி வந்தார். அந்த பகுதியைச் சேர்ந்த புராசாமி (65) என்பவர் பழனி குருநாதனின் தச்சுப் பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து இரவு நேரங்களில் மது குடிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரண்டு பேரும் நேற்று பட்டறையில் வாந்தி மயக்கத்துடன் கிடந்துள்ளனர். உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆனால், அவர்கள் இருவரும் முன்பே உயிரிழிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்கள் இறந்து கிடந்த தச்சுப் பட்டறையில், அரசு டாஸ்மாக் கடையின் திறக்கப்படாத ஒரு மானிட்டர் குவாட்டர் பாட்டிலும், காலியான மற்றொரு பாட்டிலும் இருந்துள்ளது. அந்த மதுபாட்டில்களை கைப்பற்றிய பெரம்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினரும், இருவருக்கும் எந்த விதமான பிரச்னைகளும் இல்லை என்றும் மேலும் எந்த நோயும் அவர்களுக்கு இல்லை எனவும், மது அருந்தியதால் தான் இருவரும் உயிரிழந்தனர் என்று காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்துள்ளது.