மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல்.! புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் பலி.!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், சூர்யா, மதன், வல்லரசு ஆகியோர் சேர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் கடையில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இவர்களுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த மாற்று சமுதாயந்தைச் சார்ந்த சில நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து 2 மணி நேரம் கழித்து அர்ச்சுன்ன்,சூர்யா,மதன் மற்றும் சௌந்தர் ஆகியோரை பெருமாள் ராஜபேட்டையை சேர்ந்த சுமார் 20 க்குமேற்பட்ட கும்பல் ஆயுதங்களை வைத்து தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். அப்பகுதி மக்கள் படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சிகிச்சை பலனின்றி அர்ச்சுனன், சூர்யா ஆகியோர் உயிரிழந்தனர். சூர்யா திருமணமாகி 10 நாட்களே ஆன புதுமாப்பிளை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலை குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.