திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரபல ரவுடிகள் வெட்டிக்கொலை... முன்விரோதம் காரணமா.? காவல்துறை தீவிர விசாரணை.!
விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு ரவுடிகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை மெயின் ரோட்டில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியில் இரண்டு வாலிபர்கள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது.
மேலும் சம்பவ இடத்தை பார்வையிட்ட காவலர்கள் இறந்த இரண்டு இளைஞர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரு இளைஞரின் கை மற்றும் கால் வெட்டப்பட்டு ரோட்டின் ஓரமாக வீசப்பட்டிருந்தது. மற்றொரு இளைஞனுக்கு தலை கழுத்து மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்தன.
காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட இரண்டு நபர்களும் புதுச்சேரி மாநிலம் பிள்ளையார் குப்பம் பகுதியைச் சார்ந்த அருண்(23) மற்றும் அன்பரசன்(35) என தெரிய வந்திருக்கிறது. இவர்கள் இருவரும் பிரபல ரவுடிகள் எனவும் அவர்களின் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்திருக்கிறது. இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள் முன் விரோதம் காரணமா.? என காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.