திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்னை தொட்டால் நீ கெட்ட.... திருடர்களுக்கு பாடம் புகட்டிய டாஸ்மாக் சரக்கு..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தண்டலச்சேரி கிராமத்தில் டாஸ்மாக் கடையில் காலை முதல் இரவு வரை மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு கொள்ளையர்கள், இரவு நேரத்தில் கடைக்கு பின்னால் சென்று, சிறிது சிறிதாக சுவரை துளையிட்டு உள்ளே சென்றனர்.
உள்ளே சென்ற அவர்கள் கல்லா பெட்டியின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த லட்சக்கணக்கான பணத்தை எடுத்துள்ளனர். பின்னர், கடையில் இருந்து வெளியேறும்போது அவர்கள் கடைக்குள் இருந்த மதுபானங்களை எடுத்து குடிக்க ஆரம்பித்தனர். போதை தலைகேறியதும் இருவரும் சத்தமாக சிரித்து பேச ஆரம்பித்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ரோந்து போலீஸாருக்கு, பூட்டிய டாஸ்மாக் கடைக்குள் இருந்து பேச்சு சத்தம் கேட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் உடனடியாக கடைக்கு பின்னால் சென்று பார்த்த போது சுவரில் துளையிட்டு திருடர்கள் உள்ளே நுழைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையின் கதவை தட்டி உள்ளே இருப்பவர்களை துளை வழியாக வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தனர். வேறு வழியில்லாமல் துளை வழியாக திருடர்கள் இருவரும் வெளியே வந்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் விழுப்புரத்தைச் சேர்ந்த சதீஷ் (38) மற்றும் முனியன் (40) என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் மீட்டு இருவரையும் சிறையில் அடைத்தனர்.