திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி.. கிருஷ்ணகிரி அருகே சோகம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணிக்கான் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் மங்கம்மாள்(72). இவர் அதே பகுதியிலுள்ள கடைக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த சாலையில் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மூதாட்டி மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் மங்கம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.