#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகை திருடிய 2 பெண்கள்.! சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்து பதறிய கடை உரிமையாளர்.!
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த கோவிந்த்ராம் என்பவர் அப்பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து 14 கிராம் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். தனது கடையில் நகைகள் திருடுபோனதை அறிந்த கடை உரிமையாளர் கோவிந்த்ராம், தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது தனது கடைக்கு வாடிக்கையாளராக வந்த 2 பெண்கள் நகையை திருடிச்சென்றது அதில் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளர் கோவிந்த்ராம் தனது கடையில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை எடுத்துக்கொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது நகையை 2 பெண்கள் நைசாக திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.
இதனையடுத்து உடனடியாக ஜாம்பஜார் போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வாடிக்கையாளர்கள் போல் நடித்து நகைகளை திருடிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.