மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாணவிகள்.! துடிதுடித்து போன அமைச்சர் விஜயபாஸ்கர்.!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள் ஸ்வேதா என்ற சிறுமி ஆலங்குடி அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில், அந்த சிறுமி இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வீட்டின் மொட்டைமாடிக்குச் சென்று விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு தாழ்வாகச் சென்ற மின்கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து ஸ்வேதா தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த ஸ்வேதா, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல், ஆலங்குடி அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம் என்பவரின் மகள் அஞ்சலி அரசு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துவந்துள்ளார். அந்த மாணவி வீட்டு வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் வாசலிலிருந்த எர்த் கம்பியிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தநிலையில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா, அஞ்சலி ஆகிய இரண்டு மாணவிகள் புயலால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விட்டார்கள் என்ற செய்தி அறிந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம், முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதியிலிருந்து கருணை அடிப்படையில் இழப்பீடு தொகை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.