இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்... அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!



Udhayanidhi has said that I will respond to Stalin's criticisms through my activities

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவையில் 35 வது அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மெய்ய நாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார்.

அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது;- வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. பொறுப்பேற்றதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன். கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. மாமன்னன் தான் எனது கடைசி திரைப்படம்.

என் மீது வரும்  விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன். என்னால் முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளை செய்வேன். மேலும் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என கூறியிருந்தோம், அதை நிறைவேற்ற பாடுபடுவேன். ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.