திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்..!! ஒன்றிய அரசை கண்டித்த உதயநிதி..!!
ரயிலில் பயணம் செய்யும் மக்களின் பாதுகாப்பினை மத்திய ரயில்வே அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை அருகே சுற்றுலா ரயிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென நடந்த இந்த விபத்து குறித்து முதற்கட்டமாக ரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நல துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை ரயில் விபத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
"மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.
மதுரை ரயில் நிலையத்தில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தது மிகுந்த வேதனையைத் தருகிறது.
— Udhay (@Udhaystalin) August 26, 2023
இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று…
இந்த கோர தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்.உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதலை தெரிவிக்கும் அதேவேளையில், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் நலம்பெற விரும்புகிறோம்.
ரயில் பயணங்களில் மக்கள் பாதுகாப்பினை உறுதிசெய்ய ஒன்றிய ரயில்வே அமைச்சகம் உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.