இதை மட்டும் செய்யாதீங்க.! கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்!!



Udhayanidi stalin request to maths, science teachers

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அப்பொழுது பேசிய உதயநிதி ஸ்டாலின், எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் என 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை நம் பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. ஒரு பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வாக அங்கு மாணவர்கள் நன்றாக படிப்பது மட்டும் போதாது. அந்த பள்ளி எல்லா வகையிலும் மற்ற பள்ளிகளுக்கு முன்உதாரணமாக இருத்தல் வேண்டும்.

விளையாட்டில் திறமைமிக்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை போட்டிகளில் பங்கேற்க செய்யுங்கள். முக்கியமாக கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்பை கடன் வாங்காதீர்கள். முடிந்தால் கணிதம் மற்றும் அறிவியல் வகுப்புகளிலும் விளையாடுவதற்கு மாணவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.