மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல க்கு தில்ல பாத்திங்களா!! இந்தா அட்ரஸ்.. தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வா.. அட்ரஸ் கொடுத்து சவால்விட்ட உதயநிதி.
தைரியமிருந்தால், தனது வீட்டில் வந்து ஐடி சோதனை நடத்தட்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை அடுத்து அனைத்து இடங்களிலும் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதேநேரம் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் என பலரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் திமுக கட்சியின் தலைவர் முக. ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் வீட்டில் வருமானவரித்துறையின் இன்று 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவரும்நிலையில், தைரியமிருந்தால், தனது வீட்டில் வந்து ஐடி சோதனை நடத்தட்டும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே முக்கோணம் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், "உங்களின் உருட்டல், மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். எனது சகோதரி வீட்டிற்கு ஐடி ரெய்டு அனுப்பி மிரட்டிபார்க்குறீர்கள். இதோ.. இதுதான் எனது முகவரி.. தைரியம் இருந்தால் என் வீட்டிற்கு வந்து சோதனையிட்டுப் பாருங்கள்" என உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.