திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
செங்குத்தாக நிற்கும் உலக்கை, அம்மிக்கல்! சூர்யகிரகணத்தால் ஏற்படும் அற்புத காட்சி!
சூர்யகிரகணம் இன்று காலை தொடங்கி காலை 11.14 மணி வரை நீடித்தது. 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசய கிரகணம் என்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இந்த கிரகணத்தை பார்த்து ரசித்தனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மக்கள் சூர்யகிரகணத்தை பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூர்யகிரகணத்தின்போது உலக்கை மற்றும் அம்மி கல்லை செங்குத்தாக நிற்கவைத்தும் மக்கள் அதிசயம் நிகழ்த்தினர். பொதுவாக உலக்கை மற்றும் அம்மி கல்லின் நுனி பகுதி தட்டையாக இருக்காது, இதனால் அவற்றை செங்குத்தாக நிற்கவைப்பது கடினம்.
ஆனால், கிரகணத்தின்போது புவிஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும் என்பதால் இந்த சமயத்தில் அவை செங்குத்தாக நிற்கும். கிரகணம் முடிந்த பிறகு அவை கீழே விழுந்துவிடும். இதை வைத்துதான் நமது முன்னோர்கள் கிரகணம் தொடங்கும் மற்றும் முடியும் நேரத்தை கணக்கிட்டனர்.