"இப்பவே ரூ.27 லட்சம் வேணும்" - ரோஹிணிக்கு செக் வைத்த விஜயா.. வைரல் ப்ரோமோ இதோ.!
திருப்பூரில் பரபரப்பு.. பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு!
பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வெட்டிவிட்டு தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக நேச பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு வழக்கம் போல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரை கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஒன்று திடீரென வழிமுறைத்தது.
இதனையடுத்து அந்த மர்ம கும்ப பொங்கல் அறிவால் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் நேச பிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள் பல்லடம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.