மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு தடையான சாதி.. காதலியை சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சஹார் மாவட்டத்தை சேர்ந்தவர் டிது ஜாதவ் (24). இவர் தற்போது டெல்லியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக புலந்த்சாஹரை சேர்ந்த 21 வயது இளம்பெண் நேஹா சிங், க்ளூற்கு சென்று வரும்போது நட்பாக பேசி இருக்கிறார்.
இவர்களின் நட்பு பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இருவரும் உயிருக்கு உயிருக்காக காதலித்து வந்த நிலையில், பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
மேலும், பெண்ணின் பெற்றோர் நேஹாவுக்கு பிப்ரவரி 13 அன்று உறவினர் இளைஞருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காதல் ஜோடி நேரில் சந்தித்து இருக்கிறது.
காதல் ஜோடி தங்களின் குடும்பத்தை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள எடுத்த முயற்சியும் கைகூடவில்லை. இவர்களின் திருமணத்திற்கு காதலர் தலித், காதலி வேறு சமூகம் என்ற தடை பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இப்பூவுலகில் காதல் கைகூடாது என்பதை உணர்த்த ஜாதவ், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.