தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரூ.4 கோடி மதிப்பிலான போலி கோவிட்ஷீல்டு, ஜைக்கோவ்-டி தடுப்பூசி, கொரோனா கிட் தயாரித்து விநியோகம்.. இதுலயுமா பிராடுத்தனம்?..!
கொரோனா பரிசோதனை கருவி, கோவிட்ஷீல்டு, ஜைக்கோவ்-டி தடுப்பூசி போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதி, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி ஆகும். வாரணாசி நகரில் உள்ள ரோஹிட் பகுதியில் கோவிட்ஷீல்டு, ஜைக்கோவ்-டி போன்ற தடுப்பூசிகள் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, லங்கா காவல் நிலைய சரகத்தில் உள்ள ஆலைக்கு விரைந்த அதிகாரிகள், ஆலையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.4 கோடி மதிப்பிலான போலியான கோவிட்ஷீல்டு, ஜைக்கோவ்-டி தடுப்பூசிகள் மற்றும் போலியான கொரோனா பரிசோதனை கருவிகள் கண்டறியப்பட்டன.
நிகழ்விடத்தில் இருந்த ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா, ஸாம்சர், அருணேஷ் விஸ்வகர்மா ஆகிய 5 பேர் கைது செய்ய்யப்பட்டு, அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் ராகேஷ் தவானி, சந்தீப் மற்றும் அருணேஷ் ஆகியோர் வாரணாசியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும், இந்த போலி தடுப்பூசி, கொரோனா பரிசோதனைகருவிகள் பிற மாநிலத்திற்கு விநியோகம் செய்யப்பட்டதும் அம்பலமானது.