மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேங்க் ல இருந்து கூப்பிடுறோம்., இளம்பெண்ணிடம் 44 ஆயிரத்தை அபேஸ் செய்த ஆசாமி..!
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, இளம்பெண்ணிடம் ரூ.44 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் வடபழனியில் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள வடபழனி, கங்கையம்மன் கோவில் தெரு பகுதியை சார்ந்தவர் கீர்த்திகா (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று, இவரின் அலைபேசிக்கு அழைப்புஒன்று வந்துள்ளது.
மறுமுனையில் பேசிய மர்ம நபர், தன்னை வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்து, கீர்த்திகாவின் கிரெடிட் கார்டு, வங்கிக்கணக்கு விபரம், ரகசிய குறியீட்டு எண் போன்ற விபரங்களை கேட்டுள்ளார்.
மர்ம நபரின் உண்மை ரூபம் தெரியாத கீர்த்தனாவோ, கிளிப்பிள்ளை போல அனைத்து விபரங்களையும் கூறியுள்ளார். பின்னர், மர்ம நபர் அழைப்பை துண்டித்தும், சிறிது நேரத்தில் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குறுஞ்செய்தி கீர்த்தனாவின் அலைபேசிக்கு வந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். இதனையடுத்து, வடபழனி காவல் நிலையத்தில் கீர்த்தனா அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.