#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
துக்கத்திலும் இன்பச்செய்தி.. ஷீலாவை ஏற்றுக்கொண்ட தாய்.. காதல் கணவன் கைவிட்டு சென்றதால் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய ஷீலா.!
டிக் டாக்கில் பிரபலமாகி, முகநூலில் புதுமண ஜோடியாக வலம்வந்தவர்கள் வணக்கமுங்கோ ஷீலா - நெல்லை சங்கர் தம்பதி. இவர்கள் காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து வந்த நிலையில், மதுப்பழக்கத்துக்கு அடிமையான சங்கர் தினமும் மதுபானம் அருந்திவிட்டுவந்து, ஒருகட்டத்தில் ஷீலாவை பிரிந்து சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டார்.
இந்த நிலையில், தனது வீட்டிற்கே சென்ற வணக்கமுங்கோ ஷீலா, தனது தவறை உணர்ந்து தாயிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அவரின் தாயும் தனது மகளின் கண்ணீரை புரிந்துகொண்டு மகளை ஏற்றுக்கொண்டார். அவர் இதுகுறித்து பேசுகையில், "நான் அன்றே தலையில் அடித்து கூறினேனே. மாமா என்னை பார்த்துக்கொள்வார் என்று கூறினாய்.
இன்று அவன் உன்னை கைவிட்டு சென்றுவிட்டான். இனி உன்னை யார் திருமணம் செய்துகொள்வார். நான் இருக்கிறேன் உனக்கு. நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன். அம்மா இருக்கிறேன் பயம்கொள்ள வேண்டாம். என்னை எதிர்த்து நீ போகாமல் இருந்திருந்தால் இன்று இந்த நிலை தேவையா?" என்று பேசுகிறார்.