ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நாளை எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?..!
![Various District Collectors Announce School and College Leave due to Heavy Rain](https://cdn.tamilspark.com/large/large_school-leave-42233-1200x630.jpg)
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகத்தின் பெருவாரியான மாவட்டங்களில் கன மழை, இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்து வந்தது.
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்யும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரவு 7 மணிநிலவரப்படி 29/11/2021 ஆம் தேதியில் (திங்கட்கிழமை) திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் மரியும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாகவும், புதுச்சேரி - காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.