திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கிருத்துவ மதமாற்றம் சுதந்திற்கான தேடல்., 'அற்ப புத்தி இருப்பவருக்கு தெரியாது' - வி.சி.க தலைவர் திருமாவளவன் பேச்சு.!
மக்கள் கிருத்துவ மதத்தை நோக்கி பயணிப்பது விடுதலைக்கான போராட்டமே அன்றி மதமாற்றம் இல்லை என்று வி.சி.க தலைவர் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திருச்சபை 75-வது ஆண்டு பவள விழாவில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, "எங்கே சுதந்திரம் கிடைக்கிறதோ அங்கு மக்கள் சாரை சாரையாக செல்லத் தொடங்கினார்கள்.
இது மதமாற்றம் இல்லை. தங்களுக்கான சுதந்திரத்தை தேடும் போராட்டம் அது. மதம் மாறினால் கோதுமைக்காக மாறியதாக கொச்சைப்படுத்துவார்கள். ஆனால், அற்ப புத்தி உள்ளவர்களுக்கு அது விடுதலைக்கான போராட்டம் என்பது தெரியாது.
கிருத்துவம் இந்திய மண்ணில் அடியெடுத்து வைக்கவில்லை என்றால், ஆங்கிலேயர்கள் இம்மண்ணை ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சனாதானம் இன்னும் கொட்டமடித்துக்கொண்டு இருக்கும்" என்று தெரிவித்தார்.