திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: திடீர் காய்ச்சல், உடல்நலக்குறைவு..விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி மருத்துவமனையில் அனுமதி..!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தற்போது சென்னையில் உள்ள இல்லத்தில் இருக்கிறார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்படவே, சிகிச்சைக்காக வடபழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். காய்ச்சலின் காரணமாக பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் 2 நாட்கள் சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செப். 30ம் தேதி வரையில் தன்னை சந்திக்க வேண்டாம் எனவும், ஓய்வுக்கு உறுதுணையாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.