திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வி.சி.க தலைவர் திருமாவளவனின் வேண்டுகோளை முக்கிய காரணத்திற்காக நிராகரித்த திமுக.. இதுதான் விசயமாம்..!
ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக திருமாவளவன் அழைப்பு விடுத்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என வி.சி.க தலைவர் பேசினார்.
சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அளித்த பேட்டியில், "அக்.11 ம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் தோழமை கட்சிகளுடன் சேர்ந்து சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர் நடைபெறும். இந்த அறப்போரில் ஆளுங்கட்சி என்ற அடிப்படையில் திமுக மட்டும் கலங்குகொள்ளவில்லை.
பிற திமுகவின் கூட்டணி கட்சிகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை விரும்பும் கட்சிகள் போராட்டத்தில் கலந்துகொள்கிறது. இந்த நாளில் தமிழக மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து, கைகோர்த்து வெறுப்பு அரசியலை எதிர்க்க ஒன்றுகூட வேண்டும். நமது கட்டுப்பாடு பகைவர்களை அச்சுறுத்த வேண்டும்.
மாலை 4 மணியளவில் மனிதசங்கிலி அறப்போர் நடைபெறும். தமிழகம் சமூக நல்லிணக்கம் கொண்ட மாநிலம். மதத்தின் பெயரால் இங்கு மக்கள் மோதிக்கொள்ளவில்லை. பாபர் மசூதி இடிப்பின் போது கூட தமிழகம் அமைதியாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளிக்க கூடாது" என்று பேசினார்.