#Breaking: வீரப்பன் மகள் வித்யாராணிக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு..!



Veerappan Daughter Vidhyarani NTK Youth Wing

மறைந்த சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யாராணி. இவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2024 மக்களவை தேர்தலின்போது, நாம் தமிழர் கட்சியில் அவர் இணைந்தார்.

உடனடியாக அவருக்கு நாதக தலைமை கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளராக களமிறக்கி இருந்தது. இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து பொறுப்புகளில் இருந்து விலகி வந்தனர்.

veerappan

வீரப்பன் மகளுக்கு பொறுப்பு

இந்நிலையில், இன்று வித்யாராணிக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வித்யாராணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "பாலியல் குற்றவாளி சீமானை தப்பவிடாதே" - பெரியார் கழகத்தினர் ஊர் ஊராக போஸ்டர்..!

சமீபத்தில் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையம் சென்றபோது, அங்கு வித்யாராணியை காவலர்கள் சூழ்ந்துகொண்டனர். இதன் அவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: #Breaking: பழிவாங்க சதிச்செயல்? - சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு குற்றசாட்டு.!