திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நான் விசிக தலைவன்.. என்கிட்டயே டிக்கெட் கேட்குறீயா? - போதை ஆசாமிகள் சலம்பல்.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், மாதனூர் பகுதியில் வந்த பெங்களூர் செல்லும் தமிழ்நாடு அரசுப் பேருந்தில், இரண்டு பேர் பயணம் செய்தனர். இவர்களிடம் பேருந்தின் நடத்துனர் பயணசீட்டு வாங்க வந்துள்ளார்.
அப்போது, பேருந்து நடத்துனரிடம் தன்னை விசிக பிரமுகர் என அறிமுகம்படுத்திய 2 போதை ஆசாமிகள், "உன்னை மாதிரி கண்டக்டரை நான் 1000 பேரை பாத்திருக்கிறேன். நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர். புரிகிறதா உனக்கு?. என்னிடமே நீ டிக்கெட் கேட்கிறாயா?" என கூறி இருக்கிறார்.
போதை ஆசாமிகளை அவர்களின் பாணியிலேயே சமாளித்த நடத்துனர், ஆம்பூர் பேருந்து நிலையம் வந்ததும் அவர்களை இறக்கிவிட்டு சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை எம்.ஜி.ஆர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் இரயில் முன்பதிவு தொடக்கம்.! விபரம் உள்ளே.!
நாங்க யாருன்னு தெரியுமா? “விசிக தலைவர்... எனக்கே டிக்கெட்டா?” போதையில் ஆசாமி அட்டூழியம்... உதார் விட்டவருக்கு பாடம் புகட்டிய கண்டக்டர்!#Tirupathur #DrunkenMan #VCK #GovtBus #NewsTamil24x7 pic.twitter.com/VCx9DpflrX
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 1, 2024
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24X7
இதையும் படிங்க: வேலூர்: 16 வயது சிறுமி 6 மாத கர்ப்பம்; விசாரணைக்கு பயந்து 23 வயது காதலன் தற்கொலை.!