ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இன்ஸ்டா காதலிக்கு இன்ஸ்டன்ட் கிப்ட்.. 18 சவரன் நகைகள் திருடிய வழக்கில், 19 வயது இளைஞன் அதிரடி கைது.!
பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் கோவிலுக்கு சென்றுவிட, காதலிக்கு கிப்ட் வாங்க நகைகளை திருடி கைவரிசை காண்பித்த இளைஞர் கைது செய்யப்ட்டுள்ளார்.
வேலூர் நகரில் வசித்து வருபவர் நரேஷ் குமார். இவர் கடந்த சிவராத்திரி அன்று குடும்பத்தினரோடு வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சென்றிருந்தார்.
சிவராத்திரி நிறைவு பெற்று அதிகாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 11 சவரன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது அம்பலமானது.
இதனையடுத்து, இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் இன்று பக்கத்து வீட்டில் வசித்து வந்த 19 வயது இளைஞர் ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர்.
இவர் நரேஷ் குமாரின் வீட்டில் ஆட்கள் இல்லாததை குறிவைத்து நகைகளை திருடியுள்ளார். அதனை வைத்து இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி காதலியாக மாறிய பெண்ணுக்கு பரிசு கொடுக்க திட்டமிட்டு இருந்த நிலையில், காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.