மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய கார் பயணிகள்.. சோதனையில் அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
வேலூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் தனியார் பேருந்து வாலாஜா நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தது. பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி பயணித்த சொகுசு கார், இந்த பேருந்துக்கு பின்புறம் வந்துள்ளது.
இந்நிலையில், சத்துவாச்சாரியை கடந்து இருவாகனமும் செல்கையில், கார் எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்புறத்தில் பயங்கரமாக மோதவே, நிலைதடுமாறி பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்பில் ஏறி நின்றுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள், காயத்துடன் அங்கிருந்து திடீரென தலைதெறிக்க தப்பியோடினர்.
இதனால் சுதாரித்துக்கொண்ட பொதுமக்கள் சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காரினை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில், காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்துள்ளன.
இதனையடுத்து, காரில் பயணம் செய்தது குட்கா கடத்தல் கும்பல் என்பதை உறுதி செய்த அதிகாரிகள், அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்களா? என சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரில் இருந்து தமிழகத்தில் ஆட்டோ முதல் பேருந்து வரை குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.