திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: வேலூர் சி.எம்.சி கல்லூரி ராகிங் விவகாரம்... உறுதியளித்த சி.எம்.சி நிர்வாகம்., கண்டித்த நீதிபதிகள்..! அதிரடி உத்தரவு.!
சி.எம்.சி மருத்துவக்கல்லூரி ராகிங் விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கியிருந்து மருத்துவம் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியரின் வசதிக்காக விடுதியும் உள்ளது.
இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களால் ராகிங் செய்யப்பட்டனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த விஷயம் தொடர்பான விவகாரம் சர்ச்சையாகவே சி.எம்.சி நிர்வாகம் களத்தில் இறங்கி, விசாரணை நடத்தி 7 மாணவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணகுமார் அமரிவில் விசாரணையை முன்னெடுத்து சென்றுள்ளனர்.
அப்போது, சி.எம்.சி நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கையில், "ராகிங் நடந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் முடிவில் இளைஞர்கள் ராகிங் செய்தது உண்மையாகி நிரூபணம் செய்யப்படும் பட்சத்தில், அவர்கள் எவ்வித முகாந்திரமும் இன்றி கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்" என உறுதி அளித்தது.
இருந்தபோதிலும், ராகிங் நடப்பதை எப்படி தடுக்காமல் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர்கள் இருந்தார்கள்? என்று சரமாரி கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், 2 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறையினருக்கும் & கல்லூரி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளனர்.