பட்டப் பகலில் மருத்துவரிடம் மொபைல் போன் திருட்டு; நடுரோட்டில் நடந்த சம்பவம்..!



vellore-cmc-doctor-mobile-snatching-failed-help-of-publ

மருத்துவர் காருக்குள் உட்கார்ந்து போன் பேசிக்கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த திருடன் போனை பிடிங்கி கொண்டு ஓடவே, அக்கம் பக்கத்தினர் அவனைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஒருவர், வேலூரில் உள்ள காகிதப்பட்டறை சாலையின் ஓரமாக அவருடைய காரை நிறுத்தி வைத்துவிட்டு, காரில் உட்கார்ந்தவாறு மொபைல் போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த திருடன் டாக்டர் போன் பேசிக்கொண்டு இருப்பதையும், அருகில் யாரும் இருக்கிறார்களா? என்றும் வெகு நேரமாக பார்த்துக் கொண்டிருந்துள்ளான். பின் சிறிது நேரத்தில் யாரும் இல்லை என்று சுதாரித்த திருடன், மருத்துவரின் போனை பிடுங்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளான்.

vellore

உடனே மருத்துவர் காரை விட்டு இறங்கி வந்து சத்தம் போட்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், அந்த திருடனை மடக்கி பிடித்து இழுத்து வந்து அடித்து அவனிடமிருந்து செல்போனை வாங்கி மருத்துவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல் துறையினர் செல்போன் திருடனை பிடித்து விசாரணை நடத்தியதில், அவன் சலவன்பேட்டை சாதுகார மடத்தெருவை சேர்ந்தவன் என்றும், கார்த்திக் (வயது 22) என்றும் தெரியவந்துள்ளது. அவன் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், கார்த்திக்கை சிறையில் அடைத்தனர்.