மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: ஏரியில் குளித்துக்கொண்டு இருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி பலி; வேலூரில் சோகம்..!
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா. இவரின் மகள் லலிதா. இன்று சரோஜா தனது மகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 4 பேருடன் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அங்கு சாமிதரிசனத்தை நிறைவு செய்த பெண்கள், அங்கிருந்த ஏரியில் குளித்துஉண்டு இருந்தனர். அச்சமயம் ஒருவர் எதிர்பாராத விதமாக நீரின் ஆழத்தில் சிக்கிக்கொள்ள, பதற்றத்தில் அவரை காப்பாற்ற எண்ணி ஒருவர் மாற்றி ஒருவர் என 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏரிக்கரையில் பெண்களின் செருப்பு ஆகியவை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் ஏரியில் சோதனையிட்டபோது நால்வரின் உடலும் மீட்கப்பட்டது.
இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த நபர்களின் தகவல் மற்றும் பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.