மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அசால்ட்டாக சாலையை கடந்த முதியவர்.. மரண பயத்தை காண்பித்த பரபரப்பு சம்பவம்.!
அலட்சியமாக சாலையை கடந்த முதியவர் மீது அரசுப் பேருந்து மோதிய நிலையில், அதிஷ்டத்தால் படுகாயத்துடன் அவர் உயிர்பிழைத்தார்.
வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் நகரில் இருந்து கர்நாடகா நோக்கி தமிழ்நாடு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எர்த்தாங்கல் கிராமம் அருகே செல்கையில், பேருந்து வருவதை கவனிக்காமல் முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது, திடீரென பேருந்து வந்து விட்டதை எண்ணி பதற்றத்தில் முதியவர் சாலையின் எதிர்புறம் சென்ற நிலையில், வேகமாக வந்த பேருந்தின் ஓட்டுநர் விபத்தை தவிர்க்க எண்ணி, பேருந்தை வலப்புறம் கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், முதியவர் சாலையை பாதி கடந்துவிட்டதால், அவரின் மீது அரசு பேருந்து மோதியுள்ளது. பின்னர், சாலையோர பள்ளத்தில் இறங்கி பேருந்து நின்றுள்ளது. இந்த விபத்தில் முதியவர் உயிர் இழப்பின்றி தப்பித்து இருந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.